நக்மா பந்தில் கங்குலி நாக் அவுட்?
சென்னை:
நடிகை நக்மாவுடன் ரகசிய காதலா என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கங்குலி பதில் அளிக்க மறுத்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணி வீரர்கள் பயிற்சி முகாம் சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமையுடன்முடிவடைகிறது.
இதற்கிடையில் இந்திய அணி கேப்டன் கங்குலி, நடிகை நக்மாவுடன் சேர்ந்து திருப்பதி அருகே உள்ள காளகஸ்தி கோவிலில் சாமி கும்பிட்டார். நாக தோஷத்தில்இருந்து நிவர்த்தி பெற சிறப்பு பூஜையும் நடத்தினார்கள். இந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வெளியாயின.
இந்த நிலையில் சனிக்கிழமை பயிற்சி முகாம் முடிந்ததும் நிருபர்கள் கங்குலியைச் சந்தித்தனர். அப்போது இந்திய அணி கங்குலி கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் மற்றும் பயிற்சி முகாம் குறித்து நான் கூறும் தகவல்கள் பத்திரிக்கைகளில் தவறாக வருகிறது. இதுஇனிமேல் நடக்கக் கூடாது.
நடிகை நக்மாவுடன் காதல் என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அது பற்றி நான் எதுவும் கூற முடியாது. விளையாட்டு சம்பந்தமானகேள்விகளை மட்டும் கேளுங்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம் என்றார்.
கங்குலி ஏற்கனவே திருமணமானவர். சிறந்த பரத நாட்டிய கலைஞர் டோனாவை, கங்குலி சிறு வயது முதல் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நக்மாவுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் கங்குலி. முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாரூதின் - சங்கீதா பிஜ்லானி ஜோடிபோல இவர்களது திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications