இந்தியரைக் கொலை செய்த அமெரிக்கர் கைது
நியுயார்க்:
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த 52 வயது இந்தியரைக் கொலை செய்தது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்தவர்திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்துப் போலீஸார் கூறியதாவது:
நியுஜெர்சி அருகிலுள்ள பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் அவிநாஷ் கவுஷல். வயது 52. இவரைக் கொலைசெய்தது தொடர்பாக எரிக் ஜெரோம் என்ற அப்துல் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த ஒரு கொலை தொடர்பாக மட்டும் அப்துல் தேடப்பட்டு வரவில்லை. இவர் மேல் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஜார்ஜியா, ஏதென்ஸ், டென்னஸ்ஸே ஆகிய இடங்களில் பலரைக் கொலை செய்துகொள்ளையடித்திருக்கிறார் அப்துல் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப் பல இடங்களில் தூண்டில் போட்டுத் தேடி வந்தோம். ஆனால் இவர், போலீஸார் பிடியில்சிக்கவேயில்லை. இவரைப் பிடிப்பதற்காக தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப் போலீஸ் படையினர்நியு ஜெர்ஸி நகர் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பென்சில்வேனியா அருகே காருக்குள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அப்துலை கண்டு பிடித்தோம்.அவரிடம் விசாரித்தோம். அப்போதும் போலீஸார் பிடியிலிருந்து தப்பித்து விட்டார். பின்னர் சில கிலோ மீட்டர்தூரம் வரைத் துரத்திக் கொண்டு சென்று அவரைக் கைது செய்தோம்.
வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள், கடைகள் ஆகியவற்றில் நுழைந்து கையில் கிடைத்தவற்றைச் சுருட்டிக்கொண்டு செல்வார் அப்துல்.
இதே போல் தான் இந்தியாவைச் சேர்ந்த கவுஷலையும் கொலை செய்துள்ளார் அப்துல். அவர் எங்களுக்குக்கொடுத்த வாக்குமூலத்தில், முதலில் நான் கவுஷலின் வீட்டுக்குச் சென்று அவரது உதவியாளரிடம் பணம்கேட்டேன்.
உடனடியாக அவர் கூச்சல் போட்டு கவுஷலை வரவழைத்து விட்டார். கவுஷல் என்னிடம் தகராறு செய்தார்.இதையடுத்து அவரது தலையை வெட்டி விட்டு வீட்டிலிருந்த பணம், நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டுசென்று விட்டேன் என்று கூறியுள்ளார் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications