அயோத்தி கோவிலுக்கு வாஜ்பாய் அடிக்கல்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Vajpayeeபாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். இதற்கான அடிக்கலை பிரதமர் வாஜ்பாய் நாட்டுவார்என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி.கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ம்நாளை முஸ்லீம்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.

மேலும் சர்ச்சைக்குரிய இடமான அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று இடது சாரி அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யும் பஜ்ரங்தள் அமைப்பு உறுப்பினருமான வினய் காட்டியார் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைகக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

அயோத்தியில் கண்டிப்பாக ராமர் கோவில் கட்டப்படும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம். அதுவும் பிரதமர்வாஜ்பாய் பதவியில் இருக்கும்போதே ராமர் கோவில் கட்டப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடக்கும்.

இடது மற்றும் வலது சாரி முன்னணி அமைப்புக்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள் என்றார்.

இதற்கிடையே, பிரதமர் வாஜ்பாய் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட கேட்ட போது யாரும், வினய் காட்டியாரின் பேட்டி குறித்து பதில் கூற மறுத்தனர்.

பாரதிய ஜனதாக கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை ஒரு பக்கம் கூறிக் கொண்டு வரும் இந்த வேளையில் பாரதிய ஜனதா கட்சியின்தலைமையோ மெளனம் சாதித்து வருகிறது.

முன்னதாக, வினய் காட்டியார் கூறுகையில், 2002 ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும். இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்களின்ஒப்புதலுடன் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும். இதற்காக கடந்த சில தினங்களாக இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்களை சந்தித்துப் பேசிவருகிறேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+