உ.பி.யில் பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது
லக்னோ(உ.பி):
உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அரசு சாரா அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில், பள்ளி செல்லும் வயதில் உள்ள 4 கோடி குழந்தைகளில் 3 கோடி குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தாலும் பள்ளிபடிப்பை முடிப்பவர்கள் ஒன்றரை கோடி குழந்தைகள் மட்டுமே எனத் தெரியவந்துள்ளது.
கல்வி கற்கும் பெண் குழந்தைகளின் விகிதம் மிகவும் குறைவாக, மூன்றில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது. ஆனால், குழந்தை தொழிலாளர்களின்எண்ணிக்கை 26 லட்சமாக உயர்ந்துள்ளது.
படிப்பறிவே இல்லாதவர்கள் எண்ணிக்கை 58 சதவீதமாக உள்ளது. அதில் நான்கில் மூன்று பங்கினர் பெண்கள் என்பது மிகவும் வேதனையானது. கடந்த50 ஆண்டுகளில் மாநில அரசு அமல்படுத்தி வந்த கல்வித் திட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
இந்த மாநிலத்தில் மதக் கலவரங்கள் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications