தமிழ்நாட்டுக்கு வருகிறது லோக் ஜனசக்தி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
அகில இந்திய லோக் ஜனசக்தி கட்சியின் தமிழக கிளை பிப்ரவரி 24ல் சென்னையில் ஆரம்பிக்கப்பட உள்ளது என அக்கட்சியின் அகில இந்திய இளைஞர்அணியின் துணைத் தலைவர் பழனிமுத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், கட்சியின் தலைவரான மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.துவக்க விழா பேரணியின் முடிவில், மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இக்கட்சி போட்டியிடும்தொகுதிகள் குறித்து கட்சியின் மேலிடம் உரிய நேரத்தில்அறிவிக்கும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications