இலங்கை பிரச்சனை .. நார்வேக்கு இந்தியாவும் எதிர்ப்பு
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டு வரும் நார்வே அமைதிக் குழு அமைத்துள்ள சர்வதேச கண்காணிப்பு குழுவிற்கு இலங்கைஅரசு, விடுதலைப்புலிகள் மற்றும் இந்திய தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சண்டே லீடர் பத்திரிக்கை தெரிவித்துள்ள கருத்துகளில், 9 பேர் கொண்ட சர்வதேச கண்காணிப்புக் குழுவில் ஐரோப்பிய நாடுகள் அதிகம் இடம் பெறுவதை சிங்களமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று இலங்கை அரசின் தரப்பில் கூறப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் தங்கள் இயக்கத்திற்கு எதிரான இலங்கை அரசின் போருக்கு ஆதரவளிக்கும் நாடுகள் ஆகியவை சர்வதேசகண்காணிப்பு குழுவில் இடம் பெறுவதை விடுதலைப்புலிகள் விரும்பவில்லை.
இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் அக்குழுவில் இடம் பெறுவதை இந்தியா விரும்பவில்லை.
இலங்கையின் வடக்குப் பகுதியில் புலிகள் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும். அது போல், புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு தடையின்றி பொருட்கள் செல்லஇலங்கை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு பின் இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை துவங்கும் என்று இரு தரப்பினரும் ஒத்துக் கொண்ட பின்னரேசர்வதேச கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இதனிடையே, இங்கிலாந்து அரசு வெளியடுவதாக இருந்த தீவிரவாதிகள் தடைச் சட்டம், 2000 திங்களன்று வெளியிடப்படும். ஆனால், தீவிரவாதஇயக்கங்களின் பெயர்கள் அன்றைய தினம் வெளியாகாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து இந்நடவடிக்கை இலங்கை அரசு மற்றும் இந்திய அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு என சன்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.வியாழனன்று சந்திரிகா, லண்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது விடுதலைப்புலிகளை விரைவில் தடைசெய்ய கோரியுள்ளார். இதற்கிடையே, தங்கள்இயக்கத்தை தடை செய்தால் பேச்சுவார்த்தை பாதிக்கும் என விடுதலைப்புலிகள் எச்சரித்து உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications