ஹஜ் யாத்திரை .. சவுதியில் தீவிர பாதுகாப்பு
துபாய்:
அடுத்த வாரம் முதல் ஹஜ் யாத்திரை தொடங்கவுள்ளதால் முஸ்லீம் யாத்திரிகர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியா பத்திரிக்கைகள் வெளியிட்டிருக்கும் செய்திகள்:
ஹஜ் யாத்திரையில் பங்கேற்பதற்காக இதுவரை உலகம் முழுவதிலுமிருந்து 5,77,559 ஹஜ் பயணிகள் சவுதி அரேபியா வந்துள்ளனர். ஹஜ் புனிதப் பயணம் முஸ்லீம்மக்கள் வாழ்வில் ஒரு முறை மேற்கொள்ள வேண்டிய பயணமாகும்.
அல்லாவின் பிறந்த இடம் சவுதி அரேபியா. இங்கு வருடந்தோறும் நடக்கும் ஹஜ் யாத்திரையில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள்.
எண்ணெய் வளமிக்க நாடான சவுதி அரேபியாவில் இந்த வருடம் ஹஜ் பயணிகளுக்காக 187 மில்லியன் டாலர்கள் செலவழித்து பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரிகர்கள் தங்குவதற்கான கட்டிடங்கள், நீர் சேமிப்புப் பிரிவு, உணவு விடுதிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மெக்கா கவர்னர் அப்துல் மஜித், ஜெட்டா விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஹஜ் பயணிகளின்வசதிக்காக அனைத்து வசதிகளையும் சவுதி அரசு செய்து கொடுக்கும் என்றார்.
பொதுவாக, ஹஜ் யாத்திரிகர்கள் செங்கடல் வழியாக ஜெட்டா நகருக்கு வந்து அங்கிருந்து பஸ் மூலம் மெக்கா மற்றும் மெதினாவுக்கு புனிதப் பயணம்மேற் கொள்வார்கள். யாத்திரிகர்கள் பயணம் செய்வதற்காக 10,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஹஜ் பயணிகளுக்காக டாக்டர்கள், போலீஸார் மற்றும் துப்பரவுத் தொழிலாளர்களும் மெக்கா மற்றும் மெதினா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த இரண்டு வாரங்களில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஹஜ் யாத்திரை செய்வார்கள் என்று நம்பப்படுகிறது.
முன்னதாக 1998 ம் ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது இடிபாடுகளில் சிக்கி 119 பேர் இறந்தனர். அதே போல் 1997 ல் ஹஜ் யாத்திரையின் போது நடந்தகுண்டு வெடிப்பில் 343 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காதவாறு பாதுகாப்புக்கள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications