குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை 5.1 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து பூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், திங்கள்கிழமை அதிகாலை கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் நகரில் நிலநடுக்கம்ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றனர்.
முன்னதாக கடந்த ஜனவரி 26 ம் தேதி குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது கட்ச் மாவட்டம்தான்என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தையே உலுக்கிய அந்த நிலநடுக்கத்தில் 30, 000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர், உறவினர்கள்மற்றும் உடைமைகளை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
பாகிஸ்தானிலும்:
இந்தியாவின் புஜ் நகரில் மையம் கொண்ட நிலநடுக்கம் பாகிஸ்தான் நகர்களிலும் உணரப்பட்டுள்ளது. திங்களன்று காலை 7 மணியளவில் ஏற்பட்டநிலநடுக்கமானது, சிந்து மாகாணத்தின் ஹைதராபாத், தார் மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நாகர்பார்கர் பகுதியில் சர்ச்ஒன்றின் சுவர்கள் இடிந்து விழுந்தன. எனினும், இந்நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் கிடையாது என பாகிஸ்தான் பூகம்பவியல் மையம்தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நிலநடுக்கம்:
இதற்கிடையே, ரஷ்யாவில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் லேசாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ,பொருட்சேதமோ ஏற்படவில்லை.
இந்நிலநடுக்கம் 3 என்ற ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகாச்சாக்லாஎன்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்யாவில் 1988 ம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications