இளம் பெண் மீது குத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். சின்னம்
திருவனந்தபுரம்:
கேரளாவில் கன்னூர் மாவடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்)கட்சியை சேர்ந்த பெண்ணின் காலில் பலவந்தமாக ஆர்.எஸ்.எஸ் என்றுபச்சைகுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுளளது.
இது குறித்து கேரள சட்டசபையில் எம்.எல்.ஏ. ஜெயராஜன் எழுப்பிய கேள்விக்குபதிலளித்த கேரள முதல்வர் நாயனார், பிந்து என்ற அந்தப் பெண்ணின் காலில் பச்சைகுத்தப்பட்ட சம்பவம் குறித்தது போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்தசம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை என உறுதியளித்தார்.
இந்த மாதம் 18-ம் தேதி, வெள்ளிக்கிழமை மூகமூடி அணிந்த இரண்டு பேர் பிந்துவேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவரை தடுத்து பிடித்து அவரதுஇரண்டு புருவங்களையும் மழித்து பின் அவரது இடது காலில்ஆர்.எஸ்.எஸ்.முத்திரையை பச்சை குத்தி விட்டு ஓடி விட்டனர் என கூறப்படுகிறது.
பிந்து அனைத்திந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்திலும், ஜனநாயக இந்திய இளைஞர்சங்கத்திலும் சேர்ந்த பின் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் அவருக்கு எதிராகசெயல்படத் துவங்கின.
பிந்து கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்குபா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்சும் எச்சரிக்கை விடுத்து வந்தன என சிபிஐ-எம் கட்சியினர்கூறுகின்றனர்.
ஆனால் பா.ஜ.க.வினர் இதை மறுத்து வருகிறார்கள். இது கம்யூனிஸ்ட் கட்சிகாரர்களால்தங்களுக்கு எதிராக கூறப்படும் பிரச்சாரம் என கூறி வருகின்றனர்.
பிந்து சில நாட்களுக்கு முன் தனது விருப்பப்படியே தன் உடலில் பச்சை குத்திக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிந்து உள்ளூர் சிபிஐ-எம் உறுப்பினர்கள் கூறிய பின்னரே சனிக்கிழமை போலீசில்புகார் செய்ததாக கன்னூர் மாவடத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இந்த நிகழ்ச்சி கன்னூர் பகுதியில் நடந்தது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அங்குஅடிக்கடி மதச் சண்டைகள் நடந்து வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications