அ.தி.மு.க.வுடன் கூட்டணி: பிளவை நோக்கி த.மா.கா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் அதிமுக எதிர்ப்புத் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளதால் தமாகா தலைவர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுடன், காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதகளும், மூப்பனாரும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அக்கூட்டத்தில் அதிமுக எதிர்ப்பு தலைவர்கள்யாரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் ஒட்டுமொத்தமாக இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.

சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாமக விலகியதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

பாமக இடம் பெற்றிருப்பதால் அதிமுக விலும், பாஜக இடம் பெற்றிருப்பதால் தமிழ் மாநில காங்கிரசுக்கு கொள்கை ரீதியாக எந்தக் கட்சியில்சேர்வது என்பது குழப்பமாக உள்ளது.

இதனால் காங்கிரஸ் மற்றும் தமாகா இரண்டு கட்சிகளும் குழப்பத்தின் உச்சத்தில் உள்ளன.

காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதிகள், ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ள நிலையில் தமாகாவுக்கு 40 இடங்களைக் கொடுக்கத் தயார் என்றுதிமுக அதிரடியாக அறிவித்துள்ளதால் மூப்பனார் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கிறார்.

அதிமுக வில் பல கட்சிகள் இருந்த போதிலும் தனித்து ஆட்சி அமைப்பதையே அக்கட்சி விரும்புகிறது. தங்கள் கட்சிக்கு மெஜாரிட்டி தொகுதிகளைஎடுத்துக் கொண்டு பாமக வுக்கும் கணிசமான தொகுதிகளைக் கொடுத்து விட்ட நிலையில் காங்கிரசுக்கும், தமாகா வுக்கும் அவர்கள் கேட்கும்தொகுதிகளைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.

அதிமுக எதிர்ப்பு தலைவர்கள் அதிருப்தி:

மூப்பனாருக்கு திமுக தரப்பிலிருந்து பல முறை அழைப்பு வந்தும், 40 தொகுதிகள் தரத் தயார் என்றும் கருணாநிதி அறிவித்த பிறகும் மூப்பனார் அங்குசெல்லவில்லை என்பதால் அதிமுக எதிர்ப்புத் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தலைவர்களில் ஒரு தரப்பினர் மூன்றாவது அணிக்கும், இன்னொரு தரப்பினர் திமுக வுக்கும் சேரும் நிலையில்உள்ளனர்.

இவர்கள் அனைவரும் திங்கள்கிழமை சத்யமூர்த்தி பவனில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அழகிரி, சுதர்சனம், பீட்டர்அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூப்பனாருக்கே தெரியாமல் தமாகா வைச் சேர்ந்த சிலர் திமுக வுடன் பேசிய ரகசியப் பேச்சுவார்த்தைக்குப்பிறகு தான் தமாகா வுக்கு 40 இடங்கள்கொடுக்கத் தயார் என்று திமுக அறிவித்தது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் பேசி முடிவெடுக்கப்படும் என்று மூப்பனார் கன்னியாக்குமரியில் தெரிவித்தார்.

இருப்பினும் சென்னை திரும்பிய மூப்பனார், கருணாநிதியின் அறிவிப்பை நிராகரித்ததால் அதிமுக எதிர்ப்புத் தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைவெளிப்படுத்துவதற்காகவே அவர்கள் மூப்பனார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பை புறக்கணித்தனர்.

கட்சியில் அதிமுக எதிர்ப்புத் தலைவர்கள் தனித்தனி அணியாகப் பிரிந்து நிற்பது மூப்பனாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காங். தலைவர்கள் ஜெ.வுடன் ஆலோசனை:

இந்த நிலையில் சோனியா காந்தியின் தூதர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழ்நாடு,புதுவை சட்டசபைத் தேர்தல் குறித்து அவர்கள் 1 மணி நேரம் பேசினார்கள்.

இதுகுறித்து ஜெயலலிதா கூறுகையில், பேச்சுவார்த்தை மிகவும் தீவிரமாக இருந்தது என்று தெரிவித்தார்.

பிரணாப் முகர்ஜி கூறுகையில், டெல்லிக்குச் சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவிப்போம். அவர் காங்கிரஸ் காரியகமிட்டியைக் கூட்டி விவாதித்து தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுப்பார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+