மூப்பனாருடன் பேசுவதில் அர்த்தமில்லை: கருணாநிதி
சென்னை:
இனிமேலும் தேர்தல் கூட்டணி குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேசுவதில் அர்த்தமில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி சென்னையில்திங்கள்கிழமை இரவு தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள் இரவு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு தமாகா வுடன் முடிந்த அளவு பேசி விட்டோம். தமாகாஎம்.எல்.ஏ. அழகிரி திமுக வுடன் பேச்சுநடத்தினார்.
இருப்பினும் அவர்களால் கூட்டணி குறித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தொடர்ந்து தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வதில் தமாகா இழுபறி நிலையையேகடைபிடிக்கிறது.
இனிமேலும் நாங்கள் திமுக கூட்டணிக்கு வருமாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிடம் கேட்டுப்பயனில்லை. அதாவது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப்பயனில்லை. தேர்தலில் 40 தொகுதிகள் கொடுக்கிறோம் என்றும் கூறிப் பார்த்து விட்டோம். அதனால் நாங்கள், இனிமேல் தேர்தல் பணிகளைக்கவனிக்கத் தொடங்கி விடுவோம் என்றார்.
முன்னதாக தமிழ் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் தீரன், முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, தங்கள் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாகஅறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தவர் தீரன் ன்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications