மின்னணு வாக்குப் பதிவு கருவிக்கு ஜெ. எதிர்ப்பு
சென்னை:
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை (எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
வாக்களிப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று நமது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. எந்தக் காரணம் கொண்டும் இதில்சமரசம் செய்யக் கூடாது.
போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்குமே வாக்களிக்க பிடிக்கவில்லை என்றால், யாருக்கும் வாக்கு இல்லை என்ற கட்டத்தில் வாக்காளர்தனது முத்திரையை பதித்து பெட்டியில் போட்டுவிட்டுப் போகலாம்.
ஆனால், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் அந்த வசதி இல்லை. வாக்காளர் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பப்படாவிட்டால், அதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். இதை அங்கே அமர்ந்திருக்கும் கட்சிகளின் ஏஜெண்டுகள் பார்க்கவும் கேட்கவும்வாய்ப்புள்ளது. இதன் மூலம் ரகசிய வாக்கு என்ற உரிமை பறிபோய்விடும்.
அதே போல மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் வாக்காளர் பட்டனை அழுத்திய பிறகு, தேர்தல் அதிகாரியும் பட்டனை அழுத்தவேண்டும். அப்போது தான் ஓட்டு பதிவாகும். ஆளும் கட்சியின் நெருக்குதலுக்குப் பணிந்து தேர்தல் அதிகாரி நடந்து கொண்டால், அவர்பட்டனை அழுத்தாமல் விட்டுவிடவும் வாய்ப்புள்ளது. இதனால், எதிர்க் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகமலேயேபோய்விட வாய்ப்புண்டும்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டசும், தமிழக முதல்வர் கருணாநிதியும் எதிர்க் கட்சித் தலைவர்களாக இருந்தபோது இந்தஎந்திரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இப்போது இந்த எந்திரங்களை ஆதரிக்கின்றனர்.
அமெரிக்காவில் கூட கம்ப்யூட்டர் உதவியில் இயங்கும் வாக்குப் பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படாமல் போய்விட்டன. இதனால் தானஅந்த நாட்டிலேயே வழக்கம்போல் வாக்குச் சீட்டில் ஓட்டு அளிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கம்ப்யூட்டரின் சிப்களின் தாய்நாடான ஜப்பானிலேயே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் ஓழிக்கப்பட்டுவிட்டன.
இந்த எந்திரங்களில் 7 வகைகளில் மோசடி செய்ய முடியும் என கம்ப்யூட்டர் நிபுணர் வைன் நன் கூறியுள்ளார். இவ்வளவு மோசமானமின்னணு எந்திரங்களை முதலில் உள்ளாட்சித் தேர்தல்களில் பயன்படுத்தி சோதனை செய்து பார்க்கலாம்.
பல குறைகள் கொண்ட இந்த மின்னணு எந்திரங்களால் பல இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இது குறித்துதலைமை தேர்தல் ஆணையருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனத மனுவில் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications