இந்திய சாப்ட்வேர் வளர்ச்சிக்கு தடை இல்லை
பெங்களூர்:
இந்தியாவில் சாப்ட்வேர் வளர்ச்சிக்கு எந்தத் தடையும் ஏற்படாது என பெங்களூரில் நடைபெற்ற கருத்தரங்குஒன்றில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் தன்மை குறித்த கருத்தரங்கு ஒன்றிற்கு ஹாங்காங்கைச் சேர்ந்த ஏசியாபிரைவேட் ஈக்விடி ரிவ்யூ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறையின்வளர்ச்சி பற்றி பேசியவர்கள், இந்திய மென்பொருள் ( சாப்ட்வேர்) உற்பத்திக்கு வெளிநாடுகளில் தேவை அதிகம்.உள்நாட்டிலும் அதன் தேவை அதிகம் இருப்பதால் இத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி தடையற்றதாக இருக்கும்என தெரிவித்தனர்.
கருத்தரங்கில் துவக்கவுரை ஆற்றிய வார்பர்க் பிங்கஸ் நிறுவனத்தின் தலைவர் திலிப் பதக், 2008ம் ஆண்டில்இந்திய தொழில் நுட்ப உற்பத்திதிறன் நாட்டின் மொத்த உற்பத்தி திறனில் 20% அளவிற்கு வளர்ச்சி பெறும் என்பதுநாஸ்காமின் எதிர்பார்ப்பாகும். இதனை அடைவதற்கு தடையாக இருக்கும் உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகளையப்பட வேண்டும் என்றார்.
அமெரிக்காவின், ஹார்பர் வெஸ்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் எட்வர்ட கெனே பேசும் போது, அமெரிக்காவில்உள்ள பணியாளர் பற்றாக்குறைவினால், இந்தியாவிலிருந்து மென்பொருட்கள் அதிகளவில் இறக்குமதிசெய்யப்படுகின்றன. ஃபார்ச்சூன் 500 எனப்படும் மிகப்பெரிய நிறுவனங்களில் பாதிக்கு மேல் இந்தியமென்பொருட்களையே பயன்படுத்துகின்றன.
மென்பொருள் தரக்கட்டுப்பாட்டில் இந்திய நிறுவனங்கள் கவனம் செலுத்துவதால் வெளிநாடுகளில் இந்தியமென்பொருட்கள் அதிகளவில் விரும்பப்படுகின்றன என பிளான்டேஸியா நிறுவனத்தின் ஆனந்த் சுதர்ஸன்தெரிவித்தார்.
கருத்தரங்கில், இந்திய அரசு நிறுவன அதிகாரிகள், வெளிநாட்டு நிறுவனங்களின் வல்லுநர்கள் பலர் பங்கேற்றனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications