குப்தா மறைவிற்கு சங்கரய்யா இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திரஜித் குப்தா மறைவிற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சங்கரய்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் நம் நாட்டின் உள்துறை அமைச்சராக பணிபுரிந்தவரும், சிறந்த பாராளுமன்றவாதியுமான தோழர்இந்திரஜித் குப்தா அதிகாலை மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு துயரமடைகிறது.
அவரது மறைவு இடது சாரி இயக்கத்திற்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் பேரிழப்பாகும். அவரது மரணத்தால் துயரமடைந்திருக்கும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் கட்சியின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications