மூளை வேறு...மனம் வேறா?

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

மருத்துவரீதியில் இறந்துவிட்ட (கிளினிக்கலி டெட்) பிறகும் பலர் மனதளவில் உயிர்வாழத் தான் செய்கிறார்கள் என்கிறது பிரான்ஸ் நாட்டு மருத்துவ ஆய்வு மையம்.

ஆராய்ச்சியாளர்கள் 63 இருதய நோயாளிகளை பரிசோதித்த பின் இந்த முடிவைவெளியிட்டுள்ளனர்.இது குறித்து சவுத் ஆம்ப்டன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள்கூறுகையில், உடல் தனது இயக்கத்தை நிறுத்திவிட்டாலும், மூளை தனதுசெயல்பாட்டை நிறுத்திவிட்டாலும் கூட மனம் தொடர்ந்து வேலை செய்கிறது.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இறக்கும் நிலையை எட்டும் 10 பேரில்ஒருவருக்கு இந்த மன செயல்பாடு தொடர்கிறது.அவர்களுக்கு மன எழுச்சி,தெளிவான சிந்தனைகள் ஏற்படுகின்றன. இது அவர்கள் நாடித் துடிப்பும், மூச்சும்அடங்கிய பின்பு ஏற்படுகிறது என்ற கண்டுபிடிப்பு தான் மருத்துவர்களைஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பரிசோதனை செய்யப்பட்ட 63 நோயாளிகளில் 7 பேர் தங்கள் உடல் தனது பாரத்தைஇழந்தது போலவும், உற்சாகமான மன நிலையும் ஏற்பட்டதாக நினைவு கூர்ந்தனர்.

சாம்பர்னியா என்ற பல்கலைகழக ஆராய்ச்சியாளர் கூறுகையில், இவர்கள்அனைவரும் மாரடைப்பு காரணமாக சிறிது நேரம் மூச்சு இழந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இது ஆக்சிஜன் வாயு குறைவாலோ அல்லது கார்பன்-டை-ஆக்சைட்அளவின் மாற்றத்தாலோ ஏற்படுவதில்லை.

மாறாக 63 பேரில் 4 பேர் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததை உணர்ந்தனர். அவர்கள்தங்கள் உணர்வு பற்றி கூறியவை கற்பனையானவை அல்ல. ஏனென்றால் அவர்கள்தங்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகள் குறித்து விளக்கமாக, உணர்வு பூர்வமாக கூறினர்.

மனமும், மூளையும் தனித்தனியானதா, ஒன்றிக்கொன்று சம்பந்தமில்லாததா என்று கூறநீண்ட ஆராய்சி தேவை என அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+