ஒன் டே போட்டியில் கிறிஸ் ஹாரிஸின் சாதனை
நேப்பியர்:
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் அப்ரிடியின் விக்கெட்டை எடுத்ததின் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தநியூஸிலாந்து பெளலர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் கிறிஸ் ஹாரிஸ்.
ரிச்சர்ட் ஹாட்லி எடுத்திருந்த 158 விக்கெட்டுகளே(115 ஆட்டங்கள்) இதுவரை சாதனையாக இருந்தது. ஹாரிஸ், தன்னுடைய 175வது மேட்ச்சில்159வதுவிக்கெட்டுகளை வீழ்த்தி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டாஸில் வென்ற நியூஸிலாந்து, பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய பணித்தது. ஆட்டத்தின் முதல் பந்தில் தொடங்கிய பாகிஸ்தானின் விக்கெட் வீழ்ச்சி கடைசியில்135 ரன்களில் முடிவுக்கு வந்தது.
நியூஸிலாந்தின் டேரில் டஃபி தனது பந்துவீச்சின் போது சயீத் அன்வரை வீழ்த்தியதோடு முதல் 6 ஓவர்களில் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.மீண்டும் பந்து வீச வந்த போது மோயின் கானை 1 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பி பாகிஸ்தான் 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற நிலைக்குகொண்டு சென்றார். அப்துல் ரஸாக் சேகரித்த 50 ரன்கள் அணியின் ஸ்கோர் 135ஐ எட்ட உதவியது.
பின்னர் ஆடிய நியூஸிலாந்து 30 ஓவர்களில் 136 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4விக்கெட்டுகளை வீழ்த்திய டேரில் டஃபிமேன் ஆப் த மேட்சாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
பாகிஸ்தானிற்கு பிடித்த நேப்பியர் பிட்ச்சில் இதற்குமுன் 1991-92ல் எடுத்த 136 ரன்களே இதுவரை நியூஸிலாந்திற்க்கு எதிரான குறைந்த பட்சஸ்கோராக இருந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications