ஒரு ராணியும் சில எலிகளும்...
லண்டன்:
இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை சமையலறையில் எலிகளின் தொல்லை அதிகரித்து விட்டது.
எலிகளால் பிளேக் நோய் வரும் என்ற பயம் ராணி எலிசபெத்தை ஆட்டிப் படைக்கிறது. தெனாலி கமல் ரேஞ்சில் அரண்டு போய் உள்ள ராணி இதனால்அரண்மனையை விட்டே இடம் பெயர முடிவு செய்துள்ளார் என்று லண்டனிலிருந்து வெளியாகும் சன் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சன் பத்திரிக்கையில் வெளியான செய்தி:
ராணி எலிசபெத் வீட்டு சமையலறையில் எலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பூச்சிகள் தடுப்பு நிபுணர்களுக்குத் தகவல்கள்கொடுக்கப்பட்டது. அவர்கள், சமையலறையிலிருந்து எலிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அரண்மனையில் வேலை செய்பவர்கள் கூறுகையில், ஒரு வாரத்திற்குள் சமையலறையில் இருக்கும் எலிகள் அனைத்தையும் நீக்க வேண்டும்.இல்லையெனில் சமையலறையையே மூடி விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
அரண்மனையில் வேலை செய்யும் பணியாள் ஒருவர் கூறுகையில், நாங்கள், விரைவில் எலிகள் அனைத்தையும் சமையலறையிலிருந்து நீக்குவோம் என்றார்.இதற்கிடையில், ராணி எலிசபெத் பங்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து விலகி லண்டனின் தெற்குப் பகுதியில் உள்ள வின்சர் கேஸ்டில்லுக்குச் செல்வார் என்றும்கூறப்படுகிறது.
இதுகுறித்து, அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், பக்கிங்ஹாம் அரண்மனை சமையலறையிலிருந்து பல எலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமையலறையிலிருந்து எலிகளை நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும் என்றார்.
இவ்வாறு பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications