தங்கையை கொன்றவர் தலை போனது
Subscribe to Oneindia Tamil
துபாய்:
சவுதி அரேபியாவில் உடன்பிறந்த சகோதரியைக் கொன்ற நபரின் தலை துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து பத்திரிக்கை நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி:
தனது உடன்பிறந்த சகோதரியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்திற்காக சவுதியைச் சேர்ந்த நபரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின்தெற்குப் பகுதியான நாஜ்ரானில் இவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இவருடன் சேர்த்து நாஜ்ரானில், இந்த வருடம் தலை துண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஐத் தொட்டுள்ளது.
கடந்த வருடம் பல்வேறு குற்றங்களுக்காக சவுதி அரேபியாவைச் சேர்ந்த 120 பேரின் தலை துண்டிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் கொலை,கொள்ளை, கற்பழிப்பு, போதைப் பொருட்கள் கடத்தல் ஆகிய குற்றங்களைச் செய்தவர்களின் தலை துண்டிக்கப்படுகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications