அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் தலிபன்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபன் படை வீரர்கள் மத்திய ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தும் முயற்சியில் 500 க்கும் மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்களைக் கொன்று குவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள யாக்வாலாங் டவுன் என்ற நகரைக் கைப்பற்றும் முயற்சியில் தலிபன் படை வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.திங்கள்கிழமை தலிபன் வீரர்கள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.
தலிபன் படை வீரர்கள், தாக்குதல் நடத்திய போது அவர்கள் தாக்குதலிலிருந்து தப்பித்தவர்கள் கூறுகையில், ஜனவரி 7 ம் தேதி முதல் தலிபன் படைவீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் மிகவும் இள வயதுடையவர்கள். கான்டகாரில் உள்ள தலிபன் இயக்கத் தலைவர் முல்லா முகமது ஓமர் உத்தரவின்படி தலிபன் படையினர் தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டனர் என்றனர்.
ஆனால் தலிபன் தலைவர் ஓமர் கூறுகையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் படுகொலைச் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றார்.இதற்கிடையே, காபூலில் பத்திரிக்கையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தலிபன் படை வீரர்கள் வீடு வீடாக சோதனை செய்து, ஆண்களை கைகளைக் கட்டி அழைத்துச் சென்றார்கள் என்றும், அவர்களை சுட்டுக்கொன்றார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
நியுயார்க்கைச் சேர்ந்த மனித வள மேம்பாட்டுத் துறை, இந்தப் படுகொலைச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து விரைவில் விசாரணைநடத்தும் படியும் ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளது.
மேலும் தலிபன் படை வீரர்களை சமாதானம் செய்ய முயற்சித்த 30 பேரையும் அவர்கள் சுற்றி வளைத்துக் சுட்டுக் கொன்றனர். உயிரிழந்தவர்களில் 150முதல் 280 பேரின் சடலங்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications