பர்கூர் காட்டில் வீரப்பன்? அதிரடிப்படை குவிப்பு
கோவை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் கேரள எல்லைப் பகுதியிலிருந்து பர்கூர் காட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதால்அதிரடிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள எல்லைப் பகுதியான சிறுவாணி, வாளையர்உள்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பதுங்கியிருந்ததாகத் தகவல்கள் வெளியானது. இதையடுத்து இங்குஅதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
வீரப்பனுடன் நேருக்கு நேர் சண்டையிட்டதாகக் கூட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர். இதில் வீரப்பனுக்குகாயம் ஏற்பட்டது எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில்வீரப்பனுடன் இருந்த மாறன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாறனுக்கும், வீரப்பனுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வீரப்பனிடமிருந்து பிரிய நேர்ந்தது எனவும், இதனால்தான் மாறன் போலீசில் சிக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் வீரப்பன் கேரள மாநிலம் கல்லடிக் கோடு என்ற வனப் பகுதிக்குத் தப்பிச் சென்றதாகஅதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
அவரைத் தேடி கல்லடிக் கோடு பகுதியில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தற்போதுவீரப்பன் பர்கூர், அந்தியூர் பகுதியில் உள்ள வனப் பகுதிக்குத் தப்பிச் சென்று விட்டார் எனக் கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications