எய்ட்சைக் கட்டுப்படுத்த இந்தியா - பிரான்ஸ் கூட்டுத்திட்டம்
டெல்லி:
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த இந்தியாவும் பிரான்ஸூம் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க உள்ளன.
செவ்வாய்க்கிழமை டெல்லியில் முடிவுற்ற இந்திய-பிரான்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் கூட்டத்தில் இரு நாடுகளும் தகவல் தொழில் நுட்பத்துறை, நீர்மேலாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் ஜாக்ஸ் சிராக்கின் 1998ம் ஆண்டு இந்திய வருகைக்குப்பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் பல துறைகளில் இருநாட்டுஒத்துழைப்பிற்கு வழி காணப்பட்டுள்ளது என இந்த அமைப்பின் இந்திய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராமகிருஷ்ண ஹெக்டே தெரிவித்தார்.பிரான்சின் பிரதிநிதியான பிரான்ஸின் முன்னாள் அமைச்சர் ஜீன் பிரான்சுவா போன்ஸே நிருபர்களிடம் பேசும் போது,
இந்தியாவில் தற்போதும் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ள பிரான்ஸின் தொழில் துறைக்கு எடுத்துரைக்கப்படும். இதன் மூலம்இருநாட்டு வர்த்தக உறவின் அளவை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
விஞ்ஞானத்துறை ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இந்திய-பிரான்ஸ் ஆய்வாளர்களின் ஆய்விற்காக பெங்களுர் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் நவீனலேஸர் ஆய்வகத்தை பிரான்ஸ் நிறுவ உள்ளது.
இந்திய ஆய்வாளர்கள் உருவாக்கிய எய்ட்ஸை கட்டுப்படுத்தும் மருந்தான பிரணீம் பிரான்ஸில் சோதிக்கப்பட உள்ளது. பூகம்பம் பாதித்த அகமதாபாத்நகரின் கட்டிடங்களை மறுசீரமைக்க பிரான்ஸ் வல்லுநர்குழு ஒன்று வருகிறது. இக்குழு முன்னதாக தெரிவித்திருந்த சீர்திருத்தங்களை மேற் கொள்ளுமாறுஅஹமதாபாத் நகராட்சி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கலாசார வளர்ச்சிக்காக இருநாட்டு மாணவர்களையும், பயிற்சியாளர்களையும் பரஸ்பரம் பயன்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்த அமைப்பின் தூதுக்குழு ஒன்று திங்களன்று இந்திய பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்தித்து அமைப்பின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications