பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ஹைட்ரஜன் வாயு குண்டு தாக்குதல்?
வாஷிங்டன்:
பாலஸ்தீனம் காசாவில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் மீது, இஸ்ரேல், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டஹைட்ரஜன் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது என்று அமெரிக்காவிடம் பாலஸ்தீனம் புகார் கூறியுள்ளது.
பாலஸ்தீன அமைச்சர் நாபில் ஷாத் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன படை வீரர்களுக்கிடையே யூதர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில்பாலஸ்தீன மக்களைத் தாக்குவதற்காக இஸ்ரேல், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் குண்டுகளைப் பயன்படுத்துகிறது.
காசாவில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் வீரர்கள் ஹைட்ரஜன் குண்டுகள் வைத்துத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 69 க்கும்மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்குதல் நடத்திய போது மஞ்சள் நிற வாயு வெளியேறியது.
இதுகுறித்து அமெரிக்காவிடம் புகார் கூறியுள்ளோம். அவர்கள் இந்தத் தாக்குதல் குறித்தும், தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட ஹைட்ரஜன்குண்டுகள் குறித்தும் பிற விவரங்களைக் கேட்டிருக்கிறார்கள் என்றார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் கூறுகையில், கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீது நடந்த தாக்குதலின்போது இஸ்ரேல் ஹைட்ரஜன் குண்டுகள் எதையும் பயன்படுத்தவில்லை. தங்களது நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காக கண்ணீர்ப் புகைக் குண்டுகளை இஸ்ரேல்வீரர்கள் பயன்படுத்தினார்கள் என்று கூறியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா கூறுகையில், நாங்கள், கான் யூனிஸ் அகதிகள் முகாமில் நடந்த தாக்குதல் குறித்தும், தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டஹைட்ரஜன் குண்டுகள் குறித்தும் விரிவான தகவல்களைக் கொடுக்கும்படி இஸ்ரேலிடம் கேட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications