கூட்டுறவு வங்கிகளை சுரண்டும் திமுகவினர்: ஜெ. புகார்
சென்னை:
தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலிருந்து வாங்கிய கடனை உடனடியாகத் திருப்பிச் செலுத்தும்படிக் கூறும் தமிழக அரசு, திமுக தொண்டர்களுக்குகடன் அளிப்பதற்காக ரூ 120 கோடியை எடுத்துத் தனியாக வைத்திருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக தொண்டர்களுக்கு தமிழக அரசு எவ்வித சாட்சியங்களும் இல்லாமல் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் வசதி செய்து கொடுக்கிறார்கள்.
அதே நேரம் ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளிலிருந்து கடன் வாங்கிய விவசாயிகளை உடனடியாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துமாறு நெருக்கடிக்குக்உள்ளாக்குகிறார்கள்.
வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களினால் விவசாயிகளால் உடனடியாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.வாங்கிய கடனை செலுத்தும்படி, விவசாயிகளிடம் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது திமுக அரசு.
மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கியிலும் கட்சி பிரமுகர்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் ரூ 6 முதல் 8 கோடி வரை தனியாக நிதி ஒதுக்கிவைத்திருக்கிறார்கள் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications