ஜம்முவில் 8 தீவிரவாதிகள், ஒரு ராணுவ வீரர் பலி
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8தீவிரவாதிகளும், ராணுவ வீரர் ஒருவரும் இறந்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 4 மணிநேரங்களுக்கு மேல் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார். 8 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் சண்டையில்பூஞ்ச் மற்றும் ராஜோரி மாவட்டங்களில் 18 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
செவ்வாய்க்கிழமை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கானேடார் என்ற பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தற்போது ராணுவ வீரர்கள், அங்குதீவிரவாதிகள் யாரேனும் மறைவிடங்களில் பதுங்கியிருக்கிறார்களா என்று தீவிரமாகத் தேடி வருகிறார்கள் என்றார்.
காஷ்மீர் போலீஸ் டைரக்டர் ஜெனரல் அசோக் குமார் சூரி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காணப்படும் தீவிரவாதிகள் வெளிநாட்டுத்தீவிரவாதிகள் போல் காணப்படுகின்றனர். அவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications