இலங்கையின் கவலை தீர்ப்பாரா முத்தையா முரளிதரன்?

Subscribe to Oneindia Tamil

காலே(இலங்கை):

முத்தையா முரளிதரனுக்காக மாற்றப்பட்ட, காலே கிரிக்கெட் பிட்ச்சில் அவரால் விளையாட இயலுமா என்றகவலையுடன் உள்ளது இலங்கை அணி.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வியாழனன்று காலேயில் தொடங்க உள்ளது. தொடைவலியால்பாதிக்கப்பட்ட முரளிதரன் கடந்த 2 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருவதால் அவர் அணியில் இடம்பெறுவதில் பிரச்சினை இல்லை என அணியின் பயிற்சியாளர் டேவ் வாட்மோர் கூறினாலும்,

போட்டியின் போது பீல்டிங் செய்தால் வலி அதிகரிக்க கூடும் என இலங்கை அணியின் உடற்பயிற்சியாளர்அலெக்ஸ் கோந்தூரி தெரிவிக்கிறார்.

கடந்த 1998ம் ஆண்டு ஓவல் போட்டியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிதரன் பந்துவீச்சை எதிர்கொண்டுதுவம்சம் செய்ய விரும்புவதாக கூறுகிறார் இங்கிலாந்து கேப்டன் நாஸீர் ஹூசைன்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு அடிலெய்டில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் முரளிதரன் பந்தை எறிவதாகஆஸ்திரேலிய அம்பயர் தெரிவித்ததையடுத்து இரு அணியினருக்குமிடையே ஏற்பட்ட கருத்து மோதல்தற்போதாவது தீருமா என பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

அப்போட்டியின் போது, இரு அணியினரும் விரோத மனப்பான்மையில் மாறி மாறி அப்பீல் செய்ததால்போட்டியின் நடுவர் ஹனுமந் சிங் இரு அணியினரையும் எச்சரிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+