குஜராத்தில் மசூதி, சர்ச்களை கட்டப்போகும் ஆர்.எஸ்.எஸ்.
அஹமதாபாத்:
குஜராத் மாநிலம் கட்ச் உள்பட பூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட 25 கிராமங்களில் உள்ள கோவில்கள், மசூதிகள், மற்றும்தேவாலயங்களை மீண்டும் கட்டுவோம் என்று ஆர்எஸ்எஸ் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து குஜராத் மாநில ஆர்எஸ்எஸ் அமைப்புச் செயலாளர் பிரவீண் மானியார் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச், ராஜ்கோட், அகமதாபாத், சூரத் ஆகிய மாவட்டங்களும்,அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
பல கிராமங்களில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை இடிந்து தரைமட்டமாகி விட்டன. சுமார் 25 கிராமங்களைத் தேர்வுசெய்து அந்த கிராமங்களில் ரூ 3 கோடி செலவில் மீண்டும் தேவாலயங்கள் எழுப்ப ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.
மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் கட்டுவதற்கு குஜராத் அரசு பாதி நிதியுதவி அளிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் ரூ 75 லட்சம் நிதியுதவி அளிக்கும். இவற்றில் 25 லட்சம் இந்திய மக்களிடமிருந்து ஆர்எஸ்எஸ் சார்பில் வசூலிக்கப்பட்டவை. மீதி ரூ 50 லட்சம்வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் வசூலிக்கப்பட்டவை.
இவை தவிர பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து 50 ஆரம்ப பள்ளிக்கூடங்கள் மற்றும் 100 சமுதாயக் கூடங்கள்அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சில கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ பிரிவும் அனுப்பி வைக்கப்படும் என்றார் பிரவீண்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications