சேலம் சிறையில் கைதிகள் ரகளை
சேலம்:
சேலம் மத்திய சிறையில் கைதிகள் செவ்வாய்க்கிழமை ரகளையில் ஈடுபட்டனர். கொலை வழக்கில் தண்டனைபெற்ற கைதி, மின்சாரக் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று சேலம் சிறையில் கைதியாக இருந்து வருபவர் ராமலிங்கம்(45). இவர் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு சிறையிலும் கலாட்டா செய்ததால்,இறுதியாக இப்போது சேலம் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பிப். 20 ம் தேதி காலையில் சில கைதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையை விட்டுவெளியே வந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறை அதிகாரி ஒருவர் அனைவரையும்அவரவர் அறைக்குள் செல்லுமாறு கூறினார்.
ஆனால், யாரும் உள்ளே செல்லாமல், அதிகாரியுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது ராமலிங்கம் திடீரெனமின்சாரக் கம்பத்தில் ஏறினார். மேலே ஒரு குறிப்பிட்ட தொலைவு சென்றவுடன் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார். இதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ராமலிங்கத்துடன் சேர்ந்துமற்ற சில கைதிகளும் தகராறில் ஈடுபடத் தொடங்கினர்.
இதையடுத்து சேலம் சிறையில் பரபரப்பு ஏற்படத் தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சேலம் நகரஐ.ஜி, மற்றும் தீயணைப்புப் படையினர் சிறைக்குள் விரைந்தனர். அங்கு மின்கம்பத்தில் இருந்த ராமலிங்கத்தைமீட்க தீயணைப்பு படையினர் தயாராயினர்.
இதனால் ஆத்திரமுற்ற ராமலிங்கம், தனது கையில் வைத்திருந்த பிளேடால் கீறிக் கொண்டார். எனவே பின்னர் ஐ.ஜிஜெகநாதன், ராமலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க வைத்தார். ராமலிங்கம் உட்பட 6 பேர் மீதுசிறையில் கலாட்டா செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து சேலம் சிறையில் சோதனை மேற் கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் கஞ்சா,தீப்பெட்டி, உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications