காஷ்மீரில் சண்டை நிறுத்தம் மே. 31 வரை நீட்டிப்பு
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிப்ரவரி 26 ம் தேதியுடன் முடிவடையும் சண்டை நிறுத்தத்தை மே மாதம் 31 ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக பிரதமர் வாஜ்பாய்நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 12 ஆண்டுகளாகக் காஷ்மீரில் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள தீவிரவாதிகள் தாக்குலுக்கு முடிவு கட்டும் வகையில், பல்வேறுதீவிரவாத அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது. காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்தவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நெடுங்காலமாக நடந்து வரும் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதனால் தான் நவம்பர் 28 ம்தேதி ரம்ஜானையொட்டி சண்டை நிறுத்தத்தை அறிவித்தது.
பின்னர் அது ஒவ்வொரு மாதமாக நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 26 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்துபுதன்கிழமை அனைத்துக் கட்சிகளுடனும் பிரதமர் ஆலோசித்தார்.
இதையடுத்து சண்டை நிறுத்தத்தை மே 31 ம் தேதி வரை நீட்டிப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தர அமைதியைஏற்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயல்கிறது.
சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதால் காஷ்மீர் பிரச்சனை தீர பாகிஸ்தான் முயற்சி செய்யும் என்று மத்திய அரசு நினைக்கிறது என்றார்.
மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், சில தலைவர்கள் ஜம்மு - காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். ஏனெனில் சண்டைநிறுத்தம் அறிவித்திருந்த போதிலும் அங்கு வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் சண்டை நிறுத்தத்தை நீட்டித்து பயன் இல்லை என்றார்.
ஆனால், இன்னொரு தரப்பு தலைவர்கள், ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும். அப்போது தான் காஷ்மீரில் அமைதி ஏற்படும். மேலும்பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் வரும் வாய்ப்புக்களும் உள்ளன என்றகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications