கொலை: அமெரிக்காவில் இந்திய டாக்சி டிரைவர் கைது
சியாட்டில்:
டாக்ஸி டிரைவர் ஒருவர் மற்றொரு டாக்ஸி டிரைவரை கொன்றதாக அமெரிக்க நீதிமன்ற ஜூரிகள் உறுதிசெய்துள்ளனர்.
சியாட்டில் டைம்ஸ் என்ற பத்திரிகை தெரிவித்துள்ள தகவலில், பரம்ஜித் சிங் தாலிவால் என்பவர் 1999 ஆண்டுகிறிஸ்துமஸிற்கு பின் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் உடன் பணிபுரிந்த ஜஸ்பீர் பாஸி என்ற டிரைவரை கொலைசெய்துள்ளார்.
தாலிவாலின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஃபேர் வெஸ்ட் கேப் கம்பெனியின் டிரைவர்களின் சார்பாக பாஸிதாலிவாலிடம் பேச முயன்ற போது அவரை சுட்டுக்கொன்றுள்ளார்.
தாலிவால் தற்காப்புக்காகத்தான் பாஸியை கொன்றார் என்ற வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், பாஸியைதிட்டமிட்டு கொன்றுள்ளார் என உறுதி செய்துள்ளது.
இதனால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையோடு, ஆயதத்தை பயன்படுத்தி குற்றம் புரிந்ததற்காக மேலும் 5ஆண்டுகள் சிறைத்தண்டனையை தாலிவால் எதிர்நோக்கி உள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஆர்மான்டோகோபாஸ் தெரிவித்தார்.
சிறைவாசத்திற்கு பின் தாலிவால் நாடுகடத்தப்படலாம் என்ற நிலையில் அவர் அமெரிக்காவில் தஞ்சம்கோரியுள்ளார். அதுபற்றி சிறைவாசத்திற்குப்பின் முடிவு செய்யப்படும் என்று நீதிமன்ற செய்தித் தொடர்பாளர்டான் டோனோகி தெரிவித்துள்ளார்
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications