உடுமலையில் நாராயண கவிக்கு மணி மண்டபம்
கோவை:
கோவை மாவட்டம் உடுமலையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்காக ரூ 22.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நாராயண கவி மணிமண்டபத்தைமுதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார்.
கோவைக்கு பிப். 23 ம் தேதி வரும்முதல்வர் கருணாநிதி, அங்கிருந்து திருப்பூர் வந்து சேருகிறார். அங்கு வேலன் ஹோட்டலில் தங்குகிறார். அங்கிருந்துஉடுமலைக்குச் செல்கிறார்.
உடுமலைப் பேட்டையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையால் ரூ. 22. 5 லட்சத்தில் உருவாக்கப்பட்ட நாராயண கவி மண்டபத்தைத் திறந்துவைக்கிறார். இதன் பிறகு கோவை வரும் முதல்வர், இரண்டரை கோடி செலவில் கட்டப்பட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர், கொடீசியா தொழில்கண்காட்சி வளாகத்தில் நடக்கவிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்கள் விற்பனைக் கண்காட்சியைத்திறந்து வைக்கிறார். இந்தக் கண்காட்சி 23 ம் தேதி மாலை துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.
இதில், மகளிர் குழுக்கள் தயாரித்த பொருட்கள் இடம் பெறுகின்றன. நீலகிரி, ஈரோடு, கோவை, தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தயாரித்த பொருட்கள் இதில் இடம் பெறுகின்றன. பின்னர், பூமாலை வணிக வளாகத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்கிறார் முதல்வர் கருணாநிதி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications