வீரப்பனின் அண்ணனைச் சந்திக்க நெடுமாறன் மனு
சென்னை:
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையனை சந்தித்துப் பேச அனுமதி தர வேண்டும் என்று தமிழர் தேசியஇயக்கத் தலைவர் நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக் கொடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவசுப்ரமணியத்திடம் கொடுத்துள்ள மனுவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கூறியிருப்பதாவது:
கடந்த காலத்தில் சத்தியமங்கலம் காட்டில் வீரப்பனைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டிருந்த கூட்டு அதிரடிப்படை போலீஸாரால் அப்பகுதியில் வாழும்பொதுமக்களுக்கு பல விதங்களில் தொந்தரவுகள் ஏற்பட்டது. அதே போல் இப்போதும் ஏற்படக் கூடாது. மேலும் வீரப்பனைத் தேடும் முயற்சியைகூட்டு அதிரடிப்படை போலீஸார் கைவிட வேண்டும்.
வீரப்பனைத் தேடுகிறேன் என்று கூறிக் கொண்டு அப்பாவிப் பொதுமக்கள் பலரை சிறையில் அடைத்துள்ளனர் கூட்டு அதிரடிப்படை போலீஸார்.இவ்விஷயம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களைச் சந்தித்தபோது தெரிய வந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 29 ம் தேதி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரப்பனின் அண்ணன் மாதையனைச் சந்திக்க அனுமதி கேட்டு சிறைத்துறைதலைமைக் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டேன். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
சிறைத்துறை தலைமைக் கண்காணிப்பாளர் கூறுகையில், வீரப்பனின் அண்ணன் மாதையனைச் சந்திப்பது சிறைத்துறை சட்டத்தில் இடமில்லை என்றும், அதற்குஅனுமதி கொடுக்க மாட்டோம் என்றும் கூறி விட்டார்.
மேலும் டிசம்பர் 8 ம் தேதி வெளிவந்த அரசு உத்தரவுப்படி, எம்.எல்.ஏ., எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோர் சிறையில்அடைக்கப்பட்டுள்ள தங்களது உறவினர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்களை சந்தித்துப் பேசலாம் என்று வெளியிட்டுள்ளது. இந்த அரசு உத்தரவுஅரசியல் சட்டத்துக்குப் புறம்பானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்.
அதே போல மாதையனை சந்தித்த அனுமதி தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் நெடுமாறன் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications