இன்று ஈரானில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெஹ்ரான்:
ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பார்ஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை அதிகாலை 4.4. என்ற ரிக்டர் அளவில்நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஈரான் அரசு வெளியிட்டுள்ள செய்தியில், பார்ஸ் மாகாணத்தில் உள்ள மாமஸானி என்ற இடத்தில்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்படவில்லை.
இதே போல் இதே இடத்தில் கடந்த மாதமும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போதும் பெரிய அளவில் சேதம் எதுவும்ஏற்படவில்லை.
ஈரானில் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் கடந்த வருடம்ஈரானில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தில் 300 மில்லியன் டாலர்களுக்கு மேல் சேதம் ஏற்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications