தேர்தல் கூட்டணி: 2 நாட்களில் தமாகா முடிவு
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொள்வதா அல்லது 3 வது அணிஅமைப்பதா என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிப்போம் என்று காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயந்தி நடராஜன் சென்னையில்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்துபோட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.
பிப்ரவரி 19 ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரணாப் முகர்ஜி மற்றம் குலாம் நபி ஆசாத் ஆகியோர்சென்னை வந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்கள். யாருடன் கூட்டணிவைத்துக் கொள்வது என்பது குறித்து சோனியா காந்தி இன்னும் முடிவெடுக்கவில்லை.
சில பத்திரிக்கைகளில் அதிமுக, காங்கிரசுக்கு 8 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகளும்கொடுப்பதாக அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி எதுவும் இல்லை. பத்திரிக்கைகள் இந்த3 கட்சிகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள் அதிமுக வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடுமட்டுமல்லாமல் 3 வது அணி அமைய வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
இருப்பினும் தமாகா வில் உள்ள 90 சதவீதம் உறுப்பினர்கள் அதிமுக வுக்கு ஆதரவாகவே உள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நாங்கள் கட்சியை விட்டுப் பிரிந்து விடுவோம் என்று தமாகாவில் சிலர்கூறுவதால் தலைவர் மூப்பனாரே முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார் என்றார் ஜெயந்தி நடராஜன்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications