தலைவர்களை மறந்த காங்கிரஸ்: கருணாநிதி தாக்கு
கோவை :
காமராஜருக்கு காங்கிரஸ் கட்சியினர் மணி மண்டபம் அமைக்க மறந்தலும், எங்கள் ஆட்சியில் அவருக்கு மணிமண்டபம் எழுப்பியுள்ளோம். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைக் கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கும் மணிமண்டபம் அமைத்துள்ளோம் என உடுமலைப் பேட்டையில் முதல்வர் கருணாநிதி கூறினார்.
கோவை மாவட்டத்தில் உடுமலைப் பேட்டையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பாக ரூ.22 லட்சத்தில்அமைக்கப்பட்ட நாரயணகவி மணிமண்டபத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்து பேசியதாவது:
உடுமலைப் பேட்டை எனக் கேட்கும் போதெல்லாம் எனக்கு இருவரின் நினைவு வரும். ஒருவர் உடுமலைநாராயணன் என்ற கட்சித் தொண்டர். மற்றொருவர் நாரயண கவி.
நாட்டில் எத்தனை கவிஞர்கள் தோன்றினாலும், பெரும் புகழை யாரும் அடைவதில்லை. அவ்வாறு புகழ்பெற்றவர்களில் நாராயண கவியும் ஒருவர்.
இதிலும், பெருமையையும், புகழையும் அடைந்ததில், உடுமலை நாரயண கவி பிரசித்து பெற்றவர், மக்களுக்குத்தேவையான புதிய கருத்து, சிந்தனை, புரட்சி விதை ஆகியவற்றை தனது பாடல்கள் மூலம் உருவாக்கியுள்ளார்.
உடுமலை பூவளாடி எளிய குடும்பத்தில் பிறந்த அவர் உள்ளத்தாலும், கவிதை செல்வாக்கலும் சிறப்பு பெற்றவர்.அவரோடு நீண்ட காலம் பழகிய அனுபவம் எனக்கு உண்டு. திரைப் பாடல்கள் எழும்போதும் நான் வசனம் எழுதும்போதும் அவரோடு கலைத் துறையைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறேன்.
நிறைந்த புகழையும் செல்வாக்கையும் தம் பாடல்கள் மூலம் கொண்டிருந்தார். ஆணவம், கித்தாப்பு போன்றவைஅவரிடம் இல்லை.
எளிமையாக வாழ்ந்தவர். ஒரு பாடல் எழுத இரண்டு நாள் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் முடங்கி கிடந்து,சிந்தனை செய்து, மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் நல்ல கருத்துள்ள பாடல்களை அவர் அளிப்பார்.
சீர்திருத்த கருத்துக்கள் மூலம் மக்களை திருத்த வேண்டும் என விரும்பி அவர் பாடல்களைத் தந்துள்ளார்.பெண்கள் உரிமை பற்றியும் உழவனின் சிறப்பு பற்றியும் நிறைய பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழக அரசு ஆன்றோர்களை, சான்றோர்களை, தியாகிகளை, தமிழ் அறிஞர்களை கவுரவிக்கவும் வகையில் பலமணி மண்டபங்களை எழுப்பியுள்ளது.
சென்னையில் தியாகிகள் மணி மண்டபம் , நாகர் கோவிலில் ரூ. 50 லட்சத்தில் ப.ஜீவானந்தம் மணிமண்டபம்,திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாதர் நினைவு இல்லம், நெல்லையில் சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவன்,தஞ்சையில் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மணி மண்டபம், கன்னியாகுமரியில் காமராஜ் மணி மண்டபம்போன்றவை கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்திற்கு நினைவிடம்எழுப்பியுள்ளோம்.
நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ரூ. 28 லட்சம் செலவிலும், குன்றக்குடியில் குன்றக்குடிஅடிகளாருக்கு ரூ. 26 லட்சம் செலவிலும், சிவகங்கை திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருது பாண்டியர்களுக்குநினைவிடமும், மேலூர் வட்டம், தும்பைப் பட்டியில் கக்கனுக்கு நினைவு மண்டபம், சென்னை காயிதே மில்லத்மகளிர் கல்லூரியில் காயிதே மில்லத்திற்கு மணி மண்டபம் அமைக்க பணிகள் விரைவில் தொடங்க அரசுதிட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் அவர்களின் தலைவர்களை நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள் .காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான பக்தவச்சலம், காமராஜர் ஆகியோருக்கு நாங்கள் மணிமண்டபங்கள், நினைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளோம்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
விழாவிற்கு முல்லை வேந்தன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் வரவேற்றார். மாநிலவிளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பொள்ளாச்சி எம். பி கிருஷ்ணன், ன்னாள் எம்.பிராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தித் துறை இயக்குநர் முத்துச்சாமி நன்றி தெரிவித்தார். நாராயண கவிராயர் மகன்களான ராமகிருஷ்ணன்,முத்துச்சாமி, சுப்ரமணியம் ஆகியோரை முதல்வர் மேடையில் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின்னர்இரண்டு கோடியில் கடன் திட்ட உதவிகளை வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications