குறைந்த விலை விமான தயாரிப்பில் முன்னணியில் இந்தியா
கோவை:
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இந்தியா மட்டுமே விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் தயாரித்துவருகிறது என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் தலைவர் பத்மஸ்ரீ கே. கிருஷ்ணதாஸ் தெரிவித்தார்.
கோவை அம்ரிதா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த "பிரகதி 2001 என்ற கருத்தரங்கைத் துவக்கி வைத்துகிருஷ்ணதாஸ் பேசியதாவது:
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (எச்.ஏ.எல்), சரஸ் என்ற புதிய ரக விமானங்களைத் தயாரிக்கவுள்ளது.இந்த விமானங்கள் மிகவும் இலகு ரக விமானங்களாகும். இதே போன்று 6 முதல் 7 அமர்ந்து செல்லும் விமானம்,17 பேர் பயணம் செய்யும் விமானம், 30 முதல் 50 பேர் வரை பயணம் செய்யும் விமானம், நூறு பேர் பயணம்அமரும் அளவில் சிறிய விமானம் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரிக்க உள்ளது.
அவசர காலப் பணிக்காக கடற்படை மற்றும் ராணுவப் பிரிவுகளுக்கு சிறிய ரக ஹெலிகாப்டர்களை இந்துஸ்தான்ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளது. இத்தகைய விமானங்கள், மற்றும் ஹெலிகாப்டர்கள்உலகிலேயே மிகவும் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டவை.
ஓட்டுநர்களுக்காக புதிய பயிற்சி விமானங்களையும் உருவாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவை தவிர,செயற்கைக் கோள், லான்ச்சர்கள் ஆகியவையும் உருவாக்கப்படும். இந்திய ராணுவத்திற்காக 37 ஜகுவார்விமானங்கள், 3 சுகோய் விமானங்கள் ஆகிவற்றைத் தயாரிக்க ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications