ஆஸிட் வீச்சு: கடவுள் பார்த்துக் கொள்வார் .. கெளடா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

ஹாசன் மாவட்டம் ஹர்டனஹள்ளியில் என் மனைவி சென்னம்மா தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிஓடி விசாரணைநடத்த கர்நாடக அரசு உத்தர விட்டது மகிழ்ச்சியாக இருந்தாலும், இவ்விஷயத்தில் குற்றவாளியை கடவுள்பார்த்துக் கொள்வார் என்று முன்னாள் பிரதமர் கெளடா கூறியுள்ளார்.

அவர் இதுகுறித்து முதல்வர் கிருஷ்ணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

ஹார்டனஹள்ளியில் என் மனைவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு யார் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம்.தவறு செய்தவர்களைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.

இந்தச் சம்பவம் மகாசிவராத்திரிக்காக எனது மனைவி சென்னம்மாவும், மருமகள் பவானியும் ஈஸ்வர்கோவிலுக்குச் சென்ற போது நடந்துள்ளது. கோவில் வாசலில் நடந்த இந்தச் சம்பவத்திற்குக் கடவுள்தான் சாட்சி.கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என்று முதல்வர் கிருஷ்ணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பெங்களூரிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹார்டனஹள்ளி கிராமத்தில் முன்னாள்பிரதமர் தேவ கெளடாவின் மனைவி சென்னம்மா மீது அவரது தேவெ கெளடாவின் அண்ணன் மகன் ஆசிட்வீசினார்.

இதில் சென்னம்மாவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஹார்டனஹள்ளியிலுள்ள ஈஸ்வரர் கோவிலில் சாமிகும்பிட்டுக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது.

சென்னம்மா தனது மருமகள் பவானி ரேவண்ணாவுடன் மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஈஸ்வரர்கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது தேவெ கெளடாவின் மூத்த அண்ணன் பசவ கெளடாவின் மகன்ஆஸிட் வீசினார்.

ஆஸிட் வீச்சில், சென்னம்மா தவிர, அவரது மருமகள் பவானியும், பாதுகாவலர் ஒருவரும் காயமடைந்தனர். 3பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

59 வயதாகும் சென்னம்மாவுக்கு ஆசிட் வீச்சால் 35 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸார், ஆசிட் வீசிய, பசவ கெளடாவின் மகனைக் கைது செய்தனர். இதுகுறித்து தேவ கெளடாகூறுகையில், என் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் மனைவி மீது ஆஸிட் வீசியுள்ளனர் என்றார்.தேவ கெளடா 1997 - 97 ம் ஆண்டில் பிரதமராக இருந்தார்.

சிஓடி விசாரணைக்கு உத்தரவு:

இதற்கிடையே, இவ்விஷயம் குறித்து சிஓடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+