சந்திரிகா ஏன் இந்தியா வந்தார்?
டெல்லி:
இலங்கை அதிபரின் விருப்பத்திற்கிணங்க வியாழனன்று இந்தியா வந்த அவருக்கு குடியரசுத்தலைவர்மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படாது என இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர்தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வரும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வெள்ளிக்கிழமையன்று பிரதமர்வாஜ்பாய் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அடுத்த இருநாட்களுக்கும் அரசு முறை நிகழ்ச்சி எதிலும் பங்கு கொள்ளப்போவதில்லை. தனிப்பட்ட முறையில்இந்திய விஜயம் மேற்கொண்டு உள்ளதால் அவர் தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்குகிறார்.
சந்திரிகாவின் இந்திய பயணத்தின் போது விவாதிக்கப்படவுள்ள விஷயங்கள் குறித்து இந்திய மற்றும் இலங்கைவெளியுறவுத்துறை அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. சந்திரிகா இந்தியா வந்த பின்பே இது பற்றி அறிந்துகொள்ள முடியும் என இலங்கை தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் வந்துள்ள சந்திரிகா இந்திய பிரதமரிடம் சார்க்மாநாடு மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார் எனத் தெரிகிறது.
இலங்கை இனப்பிரச்சினையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்தும் சந்திரிகா இந்தியாவிடம விவாதிப்பார்.ஏனெனில், இந்தியாவின் ஆதரவில்லாமல் இலங்கையில் அமைதி முயற்சியை ஏற்படுத்த முடியாது என இலங்கைகருதுகிறது.
இலங்கையுடனான இந்திய உறவு 80களுக்கு பிறகு இருந்த நிலை தற்பொழுது பெருமளவில் மாற்றமடைந்துள்ளது.எனவே, இலங்கை அதிபரின் விஜயம் இருநாடுகளுக்கிடையேயான கருத்து பரிமாற்றத்திற்கானது மட்டுமே என்றுகருதப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்:
இதற்கிடையே, இலங்கையில் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நேரத்தில் சந்திரிகா இந்திய விஜயம்மேற்கொண்டுள்ளதை இலங்கை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது பொறுப்பற்ற முறையில் சந்திரிகா வெளிநாட்டுபயணங்களை மேற்கொண்டுள்ளதாக அவை குறை கூறியுள்ளன. மந்திரிகளை எரிபொருள் சிக்கனம்மேற்கொள்ளச் சொன்னது, புதிய அதிபர் மாளிகை கட்டுவது போன்ற சந்திரிகாவின் பல நடவடிக்கைகளை ஐக்கியதேசிய கட்சி விமர்சித்துள்ளது.
எல்.டி.டி.ஈ.:
இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் லண்டனிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள்அறிவித்துள்ள போர்நிறுத்தத்தை அரசு ஏற்று நார்வே தூதுக்குழுவின் அமைதி முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கையை ராணுவ நடவடிக்கையை கைவிட்டுஅமைதி முயற்சிக்கு திரும்புமாறு வலியுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications