மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி - ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
தமிழை ஆட்சிமொழியாக்குவதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது தமிழக மக்களை ஏமாற்றும்முயற்சி என ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றி ஜெயலலிதா சென்னையில் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் உட்பட 19 மொழிகளை ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்று நான் 1998-ம் ஆண்டு வற்புறுத்தினேன்.
இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் வாஜ்பாய் தேசிய நிர்வாக செயல் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார். 3 ஆண்டுகாலமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழ் நாட்டில் தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் தமிழ் உள்ளிட்ட 19மொழிகளை ஆட்சி மொழியாக ஆக்கப்போவதாக என கூறயிருப்பது தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
1998-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்து பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த போது, அ.தி.மு.க.ஆதரவளிக்கும்போதே தமிழ் உள்ளிட்ட 19 ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என வற்புறுத்தினேன்.
19 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டுமென்றால் மாநிலங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் எல்லாமொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யவேண்டும. இதனால் பிரச்சனை வரும் என்றார்பிரதமர். நான் எல்லாநீதிமன்றங்களிலும் 19 மொழிகளை அறிந்த 19 பேரை பணிக்கு அமர்த்தினால் போதும் என கூறினேன்.
இதை பா.ஜ.க. ஆட்சியின் செயல் திட்டத்தில் ஒன்றாக சேர்க்க வேண்டும் என வற்புறுத்தி சேர்க்க வைத்தேன்.ஆனால் ஒரு வருடமாக தமிழை ஆட்சி மொழியாக ஆக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் பிரதமரை சந்தித்த போதெல்லாம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினேன். அ.தி.மு.க. எம்.பி.களும்,மத்தியமந்திரிகளும் இது குறித்து பிரதமரை சந்தித்து வற்புறுத்தி வந்தனர்.
தி.மு.க. , பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுக்குப் பிறகு தமிழை ஆட்சிமொழியாக்குவது குறித்து எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இப்போது தி.மு.க.. பா.ஜ.க., கூட்டணி தேர்தலில்தோல்வி அடைந்து விடும் என்ற நிலை நிலவுவதால் தமிழ் உள்ளிட்ட 19 மொழிகளையும் ஆட்சிமொழியாக்குவதாக கூறி மக்களை ஏமாற்றுகிறது
இது குறித்து 3.3.200-ம் அன்றும், 18.12.2000 அன்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும், இந்த கடிதங்களுக்குபிரதமர் 8.2.2001 அன் று பதில் எழுதியதாகவும் கூறி மக்களை கருணாநிதி ஏமாற்றுகிறார்.
சென்ற ஆண்டை சமஸ்கிருத மொழி ஆண்டு என அறிவித்த பா.ஜ.க.தி.மு.க. கூட்டணி அரசு,தமிழ் மொழி மீதுஅக்கறை இருந்திருந்தால் 1998-ம் ஆண்டின் செயல்திட்டத்தில் குழு அமைத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்.ஆனால் இப்போது தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஆட்சி மொழியாக ஆக்குவோம்என கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சி என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications