தமிழகத்தின் மக்கள் தொகை 6.2 கோடி
மதுரை:
தமிழகத்தின் மக்கள் தொகை 6.2 கோடி எனத் தெரியவந்ததுள்ளது.
மாநிலத்தின் ஆண், பெண் விகிதாச்சாரமும் சமமாக இருக்கும் எனவும் தெரிகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி சந்திரமெளலி வெள்ளிக்கிழமை மதுரையில்நிருபர்களிடம் கூறுகையில்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது வரை மதுரையில் 70 சதவிகிதமும், தேனியில் 76 சதவிகிதமும், ராமாநாதபுரத்தில்79 சதவிகிதமும், விருதுநகரில் 79 சதவிகிதமும், சிவகங்கையில் 80 சதவிகிதமும்,திண்டுக்கல்லில் 80 சதவிகிதமும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்முடிவடைந்துள்ளன.
இந்த மாதம் 28-ம் தேதிக்குள் பணிகள் முழுமையாக முடிந்துவிடும்.
28-ம் தேதி இரவு சாலையோரங்களில் குடியிருப்போரிடம் காவல்துறையினர்பாதுகாப்புடன் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இந்தக் கணக்குகளை சரிபார்க்கும் பணிநடைபெறும்.
தமிழகத்தின் மக்கள் தொகை 6.2 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது 1991-ம் ஆண்டு கணக்கெடுப்போடு பார்க்கும் போது மக்கள் தொகை 10.7சதவிகிதம் அதிகம்.
தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் என்று மக்கள் தொகை விகிதம் இருந்துவந்தது. ஆனால், இந்த முறை ஆண், பெண் மக்கள் தொகை சமமாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
14 வயதுக்கு குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 1991-ம் ஆண்டைவிட 4சதவிகிதம் குறைந்துள்ளது. 60 வயதுக்கும் அதிகமான முதியவர்களின் எண்ணிக்கைஒரு மடங்கு அதிகமாக உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் நாட்டின் நலத் திட்டங்கள்மற்றும் பல செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதால் மக்கள் அனைவரும்ஒத்துழைக்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான புகார்கள் பற்றியும், தங்கள் பகுதிக்குமக்கள் தொகை கணக்கெடுப்பாளர் வரவில்லை என்றால் அது குறித்த புகார்களைமாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோதெரிவிக்கலாம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications