2 ஆண்டில் எல்லா கிராமங்களுக்கும் டெலிபோன்!
சென்னை:
இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த இரண்டாண்டுக்குள் தொலைபேசி வசதி அளிக்கப்படும் என மத்திய தகவல் தொடர்புத்துறைஅமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்கள் கூட்டத்தில் பேசிய பாஸ்வான், நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 4 லட்சம் கிராமங்களில் தொலைபேசி இணைப்பு வசதிஅளிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் எல்லா கிராமங்களுக்கும் தொலைபேசி இணைப்பு வசதி உள்ளது.
தற்போது 100 பேருக்கு 3 பேர் இணைப்பு வைத்துள்ளனர். இந்த அளவு 2010க்குள் 100 பேருக்கு 15 பேர் வரை இணைப்பு பெரும் அளவிற்குதிட்டமிடப்பட்டுள்ளது.
லோக் ஜனசக்தி தொடக்க விழா: தமிழகத்தில் தனது கட்சியின் துவக்கவிழா மாநாட்டில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ள மத்திய அமைச்சரும்லோக் ஜனசக்தி நிறுவனத் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் :
பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள கட்சியின் கிளைகள் இந்த ஆண்டிற்குள் மேலும்பல மாநிலங்களில் தொடங்கப்படும்.
ஐக்கிய ஜனதா தளத்தின் கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர்களும்,தலைவர்களும் லோக்ஜனசக்தியில் இணைந்து வருவதால் 2002க்கு பின் ஐக்கியஜனதாதளம் என்று ஒரு கட்சி இருக்காது.
தமிழகத்தில் தற்போதுதான் கட்சியின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சியின் மாநில கிளைமுடிவு செய்யும்.
சமூக நீதி, மதசார்பின்மையை முன்னிறுத்தி உருவாகியுள்ள தேசீய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இக்கொள்கைக்கு எதிராக கருத்துதெரிவித்தால் அது அவர்களது சொந்த கருத்துதானே தவிர கூட்டணியின் கருத்து அல்ல என நிருபர்களிடம் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications