சீனாவில் நிலநடுக்கம்: 20,000 பேர் வீடுகள் இழப்பு
பீஜிங்:
சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து தங்களது உடைமைகளை இழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பசியாலும், குளிராலும், நோய்வாய்ப்பட்டநிலையிலும் தவித்து வருகின்றனர்.
சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை 6.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 109 பேர்காயமடைந்தனர். 49, 000 பேர் உடைமைகளை இழந்தனர். இவர்களில் 20, 000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
நிலநடுக்கத்தால் வீடுகள், உடைமைகளை இழந்தவர்கள் தெருக்களில் படுத்து உறங்குகிறார்கள். மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்நோய்வாய்ப்பட்டோ அல்லது கடுங்குளிர் தாங்காமலோ உயிரிழக்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது சீன அரசு.
சீனா மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு வாழும் பெரும்பாலான மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுவரை நிலநடுக்கத்தால் யாரும் உயிரிழக்கவில்லை. சீனாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மின்சாரம், குடிநீர் விநியோகம், சாலைகள்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. 200 மில்லியன் யான் பெறுமானமுள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.
முன்னதாக, சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.09 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications