ஊழல் கட்சிகளுக்கு இடமில்லையாம்: சொல்கிறது தே.ஜ.கூட்டணி
சென்னை:
ஊழல் நிறைந்த கட்சிகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் கொடுக்க வேண்டாம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில்முடிவவெடுக்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தல் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தேசியஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் மதிமுக தலைவர் வைகோ, பாஜக பிரமுகர்கள் இல.கணேசன், கிருபாநிதி, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி, எம்ஜிஆர் அதிமுக தலைவர் திருநாவுக்கரசு, எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி மற்றும் தமிழர் பூமியைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணன் தற்போது தமிழர் பூமி என்ற கட்சியைத் தொடங்கி அக்கட்சியை தேசியஜனநாயகக் கூட்டணியில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2 மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஊழல் நிறைந்திருக்கும் கட்சிகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு எப்போதுவேண்டுமானாலும் சேரலாம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்வதற்காக பலமுறை அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இதுவரை எங்களுக்குஎவ்வித பதிலும் கூறவில்லை. இனிமேல் நாங்களாக போய் த.மா.கா.விடம் கூட்டணியில் சேரும்படி அழைப்பு விடுக்க மாட்டோம்.
3 வது அணி அமைவது பற்றியோ, அது செயல்படும் விதம் குறித்தோ நாங்கள் கவலைப்படப் போவதில்லை. நாங்கள் வெற்றி ஒன்றையேகுறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறோம்.
மக்கள் வளர்ச்சித் திட்டங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள். ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுள்ள ஆட்சியை நாங்கள் விரும்புவதில்லை. ஊழலற்றநல்லாட்சி கொடுப்பதையே தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்புகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து சென்ற பின் நடக்கும் முதல் கூட்டமாகும் இது. தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள்எதுவும் விவாதிக்கவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒரு கமிட்டி அமைத்து அடுத்த இரண்டு நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்துவிவாதிப்போம்.
தே.ஜ.கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் திருப்தி ஏற்படும் வகையில் தொகுதிப் பங்கீடு இருக்கும். அதாவது கூட்டணி கட்சிகள்அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தங்களுக்கென்று தனித்தனியான தேர்தல் திட்டங்கள் உள்ளன. தேர்தல் திட்டத்தில் ராமர்கோவில் கட்டுவது தொடர்பான திட்டங்கள் எதுவும் இல்லை.
ஏற்கனவே ராமர்கோவில் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் கூறும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அதனால்ராமர் கோவில் கட்டுவது குறித்து சுப்ரீம் கோர்ட் கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்வோம் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications