பத்திரிக்கை மீது போரிஸ் பெக்கரின் இந்தியக் காதலி வழக்கு
பெர்லின்:
இரண்டு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட தனது நிர்வாணப் புகைப்படத்தை தற்போது வெளியிட்ட மாக்ஸ் என்ற பத்திரிக்கை மீது இந்தியாவைச் சேர்ந்தஜெர்மன் பாப் இசைப் பாடகி சபரினா செட்லூர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஜெர்மனைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர். இவரது காதலி என்று கிசுகிசுக்கப்பட்டவர் சபரினா. வயது 28. சிறந்த பாப் இசைப் பாடகி இவர்.இவரது நிர்வாணப் புகைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. அது தற்போது ஹம்ப்பர்க்கிலிருந்து வெளியாகும் மாக்ஸ் என்ற பத்திரிக்கையில்வெளியாகியுள்ளது.
இந்த நேரத்தில் சபரினா கூறுகையில், இந்தப் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று போட்டோகிராபருக்குக் கூறியிருந்தும் அவர் அதை மீறிபத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, சமீப காலமாக ஜெர்மனிலிருந்து வெளியாகும் பல பத்திரிக்கைகளில் சபரினா மற்றும் போரிஸ் பெக்கரின் காதல் விஷயங்கள் தொடர்ந்துவெளியாகி வருகின்றன. பத்திரிக்கைகளின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு போரிஸ் பெக்கரையும், சபரினாவையும் இணைத்து பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில் சபரினாவின் நிர்வாண புகைப்படத்தை எடுத்த போட்டோகிராபர் ஜெர்டு சிம்ஸன் சில தினங்களுக்கு முன்பு மாக்ஸ் பத்திரிக்கை அலுவலகத்துக்குச்சென்று சபரினாவின் நிர்வாணப் புகைப்படங்களைக் கொடுத்தார்.
இதையடுத்து, மாக்ஸ் பத்திரிக்கையில் சபரினாவின் நிர்வாணப் புகைப்படம் பிரசுரமானது. இதையடுத்து சபரினா தனது மானேஜர் தாமஸ் ஹோப்மேனின்உதவியுடன் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட மாக்ஸ் பத்திரிக்கை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து, சபரினாவின் மானேஜர் ஹோப்மென் கூறுகையில், சபரினாவின் நிர்வாணப் புகைப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்ஸா என்ற தீவில்எடுக்கப்பட்டது.
இந்தப் புகைப்படத்தை பத்திரிக்கையில் வெளியிடலாம் என்று சபரினா என்று முதலில் ஒத்துக் கொண்டார். அதாவது முதலில் நாங்கள் புகைப்படத்தைப்பார்ப்போம். அது நன்றாக இருந்தால் மட்டுமே பத்திரிக்கையில் வெளியிடுவோம் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
சபிரினாவின் நிர்வாண புகைப்படம் எடுப்பதற்காக மாக்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தார் 30,000 டியூட்செக் (ஜெர்மன் பணம்) வழங்கினார்கள். ஆனால் அதைஅவர்கள் வெளியிடுவதற்கு எந்த அதிகாரமும் சபரினா கொடுக்கவில்லை. எங்களிடம் ஒப்புதல் வாங்கும் முன்பே அவர்கள் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் மாக்ஸ் பத்திரிக்கை நிறுவனம், சபரினாவும், அவரது மானேஜர் ஹோப்மெனும் கூறியுள்ள கருத்துக்களை மறுத்துள்ன.
மாக்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தார் கூறுகையில், சபரினாவின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிடுமுன் அவரது முழு அனுமதி வாங்கியபின் தான் படத்தைப்பிரசுரித்தோம். தற்போது சபரினாவை புகைப்படம் எடுத்த சிம்ஸன் தற்போது விடுமுறையில் இருக்கிறார்.
இந்த நேரத்தில் ஹோப்மென் கூறுகையில், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு மில்லியன் மார்க்குகள் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், தற்போது மாக்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தார், சாதாரணப் புகைப்படங்களைப் போல் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்றும், அதுஎவ்வளவு ஆபத்தானது என்பதையும் உணரத் தொடங்கியுள்ளனர். ஆனால் சபரினாவின் நிர்வாணப் புகைப்படம் வெளியானபின் மாக்ஸ் பத்திரிக்கையின்விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications