மீண்டும் நடக்கிறார் குமரிஅனந்தன்...
சென்னை:
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன், தியாகிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறுபிரச்சினைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் கலந்தாலோசிக்க தமிழகம் முழுவதும் புதன்கிழமை முதல் சுற்றுப்பயணம் செல்கிறார்.
சமீபத்தில்தான் குமரி அனந்தன் ஒரு சுற்றுப் பயணத்தை முடித்தார். பாரத மாதாவுக்குக் கோவில் அமைப்பது குறித்து பல்வேறு தரப்பினரிடம்ஆலோசனை கேட்க இந்த சுற்றுப் பயணத்தை மேற் கொண்டார். அது முடிந்த நிலையில் இன்னொரு சுற்றுப் பயணத்தைத் மேற் கொள்ளவுள்ளார்.
புதன்கிழமை துவக்கும் சுற்றுப்பயணத்தின் போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை, பாரத மாதா கோவில் யாத்திரையின் போது கூறப்பட்டகருத்துக்கள், தியாகிகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்களிடம் விவாதிப்பார்.
28-ம் தேதி குமரி அனந்தன், கன்னியாக்குமரி மாவட்டம், நாகர்கோவில் செல்கிறார். அங்கிருந்து மாலை 3 மணியளவில் நெல்லை செல்கிறார்.பின்னர் இரவு 7 மணிக்கு விருதுநகர் பயணிக்கிறார்.
1 முதல் 2-ம் தேதி வரை குமரி அனந்தன், மதுரை, தேனி, தஞ்சாவூர், நாகப்பட்டனம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டியில் பயணம் செய்கிறார்.
3-ம் தேதி வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய நகரங்களில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அன்று மாலை சென்னை வருகிறார். அங்கு,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் பகுதி ஆதரவாளர்களைச் சந்திக்கிறார்.
4-ம் தேதி நீலகிரி செல்கிறார். அங்கு கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு பகுதி ஆதரவாளர்களுடன் பேசுகிறார். குமரி அனந்தன் சார்பில்வெளியிடப்பட்ட அறிக் கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications