மாலத்தீவு சிறையிலிருந்து 8 மீனவர்கள் விடுதலை
சென்னை:
மாலத்தீவில் கடந்த நவம்பர் மாதம் 12 ம் தேதி முதல் சிறை வைக்கப்பட்டிருந்த 8 தமிழக மீனவர்கள் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெனிபர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் விழுஞ்ஞசம் துறைமுகம் அருகிலுள்ள கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களை மாலத்தீவு கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்றனர். இதையடுத்து அவர்கள் மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களைவிடுவிக்க தமிழக அரசு கடும் முயற்சி செய்தது. இறுதியில் சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க மாலத்தீவு அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட அவர்கள் திங்கள்கிழமை திருவனந்தபுரத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications