சிறுபான்மையினருக்கு எதிரானதா திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுவதாக மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கேரளாவில் செயல்பட்டு வருகிறது மக்கள் ஜனநாயக கட்சி என்ற முஸ்லிம் கட்சி. இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில்1997-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக தமிழக சிறையில் இருக்கும் தங்கள் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுவிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதானி கேரளாவில் 1998-ம் ஆண்டு தமிழக குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது மதானியின் ஜாமீன் மனு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

திங்கள்கிழமை 5,000 மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்கள், கட்சி தலைவர் அப்துல்லா தலைமையில் கேராளாவின் வாளையார் பகுதியிலிருந்துகோயம்புத்தூருக்கு வந்து மதானி அடைக்கப்பட்டுள்ள மத்திய சிறை முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இவர்கள் தமிழக - கேரள எல்லை பகுதியில் திரண்டு பா.ஜ.க., தி.மு.க. அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இவர்கள் தமிழகத்தில்ஊடுறுவாமல் தடுக்க தமிழக அரசு 1,500 போலீசாரை நியமித்திருந்தது.

மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டு முஸ்லிம் மக்களை கொடுமைப்படுத்துகிறது. அவர்களுக்கு தங்கள் பக்க நியாயம் பற்றி எடுத்துரைக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியது.

இந்த கட்சியினர் தி.மு.க. அரசை எதிர்த்து கேரளா மாநிலத்தின் பாலக்காட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்படிருந்ததாக கோயம்புத்தூரிலிருந்து வரும்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் காஞ்சிபுரத்தில் பாரதீய குடியரசு கட்சியினர் தங்கள் கட்சி தலைமை அலுவலகம் முன் தமிழக முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரிக்கமுயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பாரதீய குடியரசுக் கட்சியினர் 1997-ம் ஆண்டு,திருநெல்வேலி, மாஞ்சோலை தொழிலாளர்களான 17 தலித்கள் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்த்துகுறித்து தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்கள் முதல்வர் கருணாநிதி பிற்படுத்தமக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளனர்.

இந் நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வை இணைக்கும் முயற்சியில் பிரபல பத்திரிக்கையாளர் சோ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க.கொடுப்பதாக கூறிய 40 தொகுதிகளுக்கு த.மா.கா. கொள்கையளவில் ஒப்புக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

த.மா.கா. வுக்கு முதலில் 35 தொகுதிகள் வழங்கப்பட்டது. த.மா.கா. காங்கிரசும் தங்களுடன் காங்கிரஸ் கட்சியும் இணைந்திருப்பதாக கூறியதும்அ.தி.மு.க. காங்கிரசுக்கு 10தொகுதிகள் கொடுக்க சம்மதித்துள்ளது.

த.மா.கா.வும், தமிழக காங்கிரசும் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுத்தவுடன் அ,தி.மு.க. தொகுதி பங்கீடு குறித்து அதிகார பூர்வமாக அறிவிப்பார்என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+