போர் விமானம்: இந்தியாவுக்கு உதவ நாடுகள் போட்டி
டெல்லி:
இந்தியாவில் உருவாக்கப்பட்ட இலகு ரக போர் விமானங்களின் தயாரிப்பில் உதவ ரஷ்யாவும், இஸ்ரேலும் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்தியபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், பாதுகாப்புத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கான தேசிய விருதுகளை வழங்கிப்பேசிய அவர்,
இந்தியா வந்த ரஷ்ய துணை பிரதமர், இந்திய-ரஷிய பேச்சுவார்த்தையின் போது இது குறித்த விருப்பத்தை வெளியிட்டார்.
ரஷியா இந்தியாவிற்கு அளிக்கவுள்ள போர்க்கப்பலான அட்மிரல் கோர்ஸ்கோவ் பற்றிய அறிக்கை பெறப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாகஅதனை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்திய பாதுகாப்புத்துறை சாதனங்கள் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பணி பாராட்டுக்குரியது.
இத்துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவது குறித்து பொகாரன் அணுகுண்டு சோதனையை ஒட்டி சர்வதேச நாடுகள் விதித்த தடைக்கு பின்பேமுடிவெடுக்கப்பட்டது. இந்திய தனியார் நிறுவனங்களின் தயாரிப்புகள் சிறப்பான வகையில் இருந்ததோடு இந்தியா தனது பாதுகாப்பு தொழில்நுட்பத்தில்தன்னிறைவு பெறவும் காரணமாக அமைந்துள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை தரக்கட்டுப்பாட்டுதுறை இயக்குநரான லெப்டினன்ட் ஜெனரல் அமர்ஜித்சிங், இந்திய நிறுவனங்களின் தயாரிப்பு வெளிநாட்டுதயாரிப்புகளைகாட்டிலும் தரமுடன் இருப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு இந்திய நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மாஸ்கோ:ரஷ்யாவின் மிக்-29கே ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்திற்கு விற்பனை விரைவில் முடிவாகும் என மிக் நிறுவனத்தின் விமானவடிவமைப்பாளரானஆன்ட்ரி கரஸ்யேவ் தெரிவித்ததாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
தற்போது இந்திய விமானந்தாங்கி கப்பலில் பயன்படுத்தப்படும் மிக் 29 வகை விமானங்களை சேர்ந்தவை. இவற்றில் உள்ள நவீன வசதிகளை சமீபத்தில்பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச விமானக்கண்காட்சியில் இந்திய விமானப்படை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேலும், மிக்27 ரக விமானங்களை பழுது நீக்குவதற்கும் கூடுதல் வசதிகள் செய்து தருவதற்குமான திட்டம் ஒன்றை மிக் நிறுவனம் இந்தியகடற்படையிடம் அளித்துள்ளது. இதே பணியை செய்வதற்காக இஸ்ரேல் விமான நிறுவனங்களும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ் - யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications