இந்தியா வருகிறார் கோபி அன்னான்
நியூயார்க்:
ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னான், மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக மார்ச் 15 ம் தேதி இந்தியா வருவார் என்று ஐ.நா.செய்தித் தொடர்பாளர்புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து ஐ.நா.செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியதாவது:
இந்தியா வரும் கோபி அன்னான், இங்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப்பேசுவார்.
முன்னதாக, அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக மார்ச் 10 ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார். அங்குள்ள தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பின் அவர்,பெஷாவரில் உள்ள ஆப்கான் அகதிகள் முகாமுக்குச் செல்வார். மார்ச் 13 மற்றும் 14 ம் தேதிகளில் வங்கதேசத்துக்குச் சென்று அங்குள்ள அரசியல்தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்.
தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கோபி அன்னான் மார்ச் 18 ம் தேதி நியூயார்க் திரும்புவார் என்றார் அவர்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
