விடுதலை சிறுத்தைகள் vs

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகேயுள்ள சிறுபினாயூரில் பெயர்ப்பலகை வைப்பதில் பா.ம.க.வினருக்கும்,விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர்.

சாலவாக்கம் அருகேயுள்ள சிறுபினாயூரில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் தங்களது பெயர்ப்பலகையைவைத்திருந்தனர். அங்கு விடுதலை சிறுத்தைகள் பெயர்ப்பலகை வைக்கக் கூடாது என்று பா.ம.க.வினர் எதிர்ப்புதெரிவித்தனர்.

இதையடுத்து பெயர்ப்பலகை அங்கிருந்து நீக்கப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள்வேறு இடத்தில் வைத்திருந்த பெயர்ப் பலகையில் சாணி அடிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அவர்கள், இதை பா.ம.க.வினர் தான் செய்திருக்க வேண்டும் என்று கருதி அவர்களிடம் விளக்கம்கேட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது.

வாய்த்தகராறு கலவரமாக மாறியது. கலவரத்தில் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை போன்றவை பயன்படுத்தப்பட்டன.

இந்தக் கலவரத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு மாவட்டத் தலைவர் கோடீஸ்வரன், துணைச் செயலாளர்கண்ணன், மதியழகன், மணி ஆகியோர் காயமடைந்தனர். பா.ம.க. தரப்பில் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தகராறை அடுத்துசாலவாக்கம் பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+