பாதுகாப்புத்துறைக்கு ரூ. 62,000 கோடி
டெல்லி:
இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட 13.8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
2001-2002ம் ஆண்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ. 62,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 54,461கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 7,539 கோடி அதிகமாகும்.
கடந்த ஆண்டு கார்கில் போரையொட்டி பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 28.2 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இப்போது ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதியைக் கொண்டு புதிய போர் விமானங்கள், போர் விமான என்ஜின்கள் மற்றும் நவீனஆயுதங்கள் வாங்கப்படும். பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீட்டில் விமானப்படைக்கு ரூ. 7,713.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிதியைக் கொண்டு ரஷ்யாவிடமிருந்து சுகோய் ரக போர் விமானங்களை இந்திய விமானப் படை வாங்கும்.
அதே நேரத்தில் துப்பாக்கித் தயாரிப்பு ஆலைகளுக்கான ஒதுக்கீடு ரூ. 1,030 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதுரூ. 262 கோடியாகத் தான் இருந்தது.
பாதுகாப்புத்துறைக்கான மொத்த ஒதுக்கீட்டில் பெரும்பாலான நிதி ராணுவத்துக்குத் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவத்துக்குமட்டும் சுமார் ரூ. 31,102.66 கோடி நிதி கிடைக்கும்.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க மட்டும் ரூ. 10,769.60 கோடி செலவாகும் எனத்திட்டமிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 5.05 கோடி தீரமாக போரிடும் வீரர்களுக்கு பரிசு வழங்கஒதுக்கப்பட்டுள்ளது.
ராணுவ கட்டடங்களை பழுதுபார்க்க ரூ. 24.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகோய் விமானங்கள் தவிர ரஷ்யாவிடமிருந்து டி-90 ரக டாங்கிகளை வாங்கவும், விமானம் தாங்கி கப்பலான அட்மிரல்கோர்ஸ்காவ் ஆகியவற்றை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதில் விமானம் தாங்கிக் கப்பலை ரஷ்யா நமக்கு ஓசியில் தான் தருகிறது. ஆனால், அதில் ரிப்பேர் பார்க்க மட்டும் 600 மில்லியன்டாலர் தேவைப்படும் எனத் தெரிகிறது.
இவை தவிர பிரிட்டனிடமிருந்து போர் பயிற்சி விமானங்களான ஹாக்-ஏ.ஜெ.டிக்களை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications